இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில், ஒன்பிளஸ் N6 ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 30-ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் அறிமுக நிகழ்வை ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல் வாயிலாகப் பயனர்கள் நேரலையில் காணலாம்.
ஒன்பிளஸ் N6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இது ரூ.18,000 முதல் ரூ.25,000 வரையிலான விலைப் பிரிவில் அறிமுகமாகலாம் என தகவல்கள் பரவி வருகிறது. மேலும், இது கருப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு நிறங்களில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமே இதன் பிரம்மாண்டமான 8,000mAh பேட்டரி தான். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 3 நாட்கள் வரை நீடிக்கும் என நிறுவனம் கூறுகிறது. மேலும், 7 ஆண்டுகள் பயன்படுத்தினாலும் இதன் பேட்டரி ஆரோக்கியம் நீடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்ய 45W SuperVooc ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
