‘NCBL 2026’ கார்ப்பரேட் பேட்மின்டன் லீக் : ரூ.1.30 லட்சம் பரிசுத்தொகையுடன் பிரமாண்டம்

சென்னை,
நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில், நிடஸ் அட்வர்டைசிங் அண்ட் மார்க்கெட்டிங் நிறுவனம் (NIDUS Advertising and Marketing Private Limited) சார்பில் ‘என்சிபிஎல் – நிடஸ் கார்ப்பரேட் பேட்மின்டன் லீக் 2026’ (NCBL – Nidus Corporate Badminton League 2026) போட்டி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த போட்டி வரும் ஏப்ரல் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் நீலாங்கரையில் உள்ள ‘அன்லீஷ் பேட்மின்டன் அரங்கில்’ (Unleash Badminton Arena) நடைபெறும். போட்டிக்கான பதிவு ஏப்ரல் 4ஆம் தேதி காலை 9 மணி வரை நடைபெறும் என்றும், போட்டி அட்டவணை அதே நாள் மாலை 5 மணிக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லீக்கில் ஆண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான சீனியர் இரட்டையர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கு பதிவு கட்டணம் விலக்கு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மொத்தம் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்கள், இரண்டாம் இடம் மற்றும் அரையிறுதி சுற்று வரை முன்னேறும் போட்டியாளர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சிக்கு டெகாத்லான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன. மேலும், பல்வேறு நிறுவனங்கள் ஸ்பான்சராக இணைந்து ஆதரவு வழங்குகின்றன.

பங்கேற்க விரும்புவோர் QR குறியீடு மூலம் எளிதாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டி மூலம் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்துவதுடன், நிறுவனங்களுக்கிடையேயான ஒற்றுமையும் வலுப்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED NEWS

Latest News