பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றும் மர்மப் பொருள் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் சீனா பல்வேறு ரகசிய சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சீனா ஒரு புதிய மர்மப் பொருளைப் பறக்கவிட்டுள்ள தகவல் வெளியாகி, சர்வதேச விண்வெளி அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 22-ம் தேதி கண்டறியப்பட்ட இந்த மர்மப் பொருளை, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் ‘ஷென்லாங்’ என்ற அதிநவீன விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, மீண்டும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பி வந்து தரையிறங்கும் வகையில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஷென்லாங் விண்கலம் பூமியைச் சுற்றி வந்து கொண்டிருந்த வேளையில், திடீரென அதிலிருந்து அடையாளம் தெரியாத ஒரு மர்மப் பொருள் விண்வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான ‘லியோலேப்ஸ்’, சீனாவின் இந்த மர்மப் பொருள் கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த ரகசிய நடவடிக்கையை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கூடங்களும், ராணுவக் கண்காணிப்பு அமைப்புகளும் தற்போது உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

Related Post

Latest News