கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறி பண மோசடி : மக்களே உஷார்

மும்பையில் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறி 2.7 கோடி ரூபாயை சுருட்டிய நூதன மோசடி கும்பல் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பையில் உள்ள கேஸ் நுகர்வோரை இலக்காகக் கொண்டு இந்த கும்பல் செயல்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) அல்லது வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தி அனுப்புகிறது. அதில், “உங்கள் கேஸ் கட்டணம் நிலுவையில் உள்ளது. இன்று இரவுக்குள் கட்டவில்லை என்றால் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்” என மிரட்டுகிறது.

கட்டணம் செலுத்துவதற்கு என்ற பெயரில் ஒரு செயலியைப் (APK File) பதிவிறக்கம் செய்யச் சொல்லி லிங்க் அனுப்புவார்கள். வாடிக்கையாளர்கள் அந்த செயலியை இன்ஸ்டால் செய்தவுடன், அவர்களின் செல்போன் முழுமையாக மோசடி கும்பலின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும்.

இதையும் படிங்க : தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு : மத்திய மின்துறை எச்சரிக்கை

இதன் மூலம் வங்கி விவரங்களைத் திருடி, சுமார் 100 பேரிடம் இருந்து 2.7 கோடி ரூபாயை அந்தக் கும்பல் கொள்ளையடித்துள்ளது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

உங்கள் மொபைலுக்கு வரும் சந்தேகத்திற்குரிய லிங்க்குகளைக் கிளிக் செய்யாதீர்கள்.

அதிகாரப்பூர்வ செயலிகளைத் தவிர, மற்ற ‘APK’ கோப்புகளை செல்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

இதுபோன்ற மிரட்டல் செய்திகள் வந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தவும்.

Latest News