அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் மெகா திருட்டு : வெளியான அதிர்ச்சி தகவல்

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கைப் பணத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள், தொடர்ச்சியாகப் பணத்தைக் கையாடல் செய்து வந்தது சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த முறைகேட்டின் முக்கியக் குற்றவாளியாக 30 வயதான அவினாஷ் சுக்லா என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காணிக்கை எண்ணும் அறையில் இருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவினாஷ் சுக்லா கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 70 முறை மிக லாவகமாகப் பணத்தைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கரூர் சம்பவம் : பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை – ஐகோர்ட்டில் புதிய வழக்கு!

காணிக்கை எண்ணும் பணிக்காக அவினாஷ் சுக்லாவுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளம் வெறும் 15,000 ரூபாய் மட்டுமே. ஆனால், இவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு அதிகாரிகளையே தலைசுற்ற வைத்துள்ளது.

குற்றவாளியின் வீட்டில் இருந்து ₹20.39 லட்சம் ரொக்கப் பணம், 1,121 அமெரிக்க டாலர்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ஒரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றுடன், அவரது வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் சொத்து ஆவணங்களையும் போலீசார் முடக்கியுள்ளனர்.

போலி கியூ.ஆர் கோடு மற்றும் மோசடிப் பெட்டி

போலீசார் நடத்திய இந்த சோதனையின் போது, அவினாஷ் சுக்லாவின் வீட்டில் இருந்து மிக விசித்திரமான ஒரு காணிக்கைப் பெட்டி கைப்பற்றப்பட்டது. அந்தப் பெட்டியின் மீது ‘ராமராஜ்ய நிதி’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்காக ஒரு போலி கியூ.ஆர் (QR Code) குறியீடும் ஒட்டப்பட்டிருந்தது. இதன் மூலம் பக்தர்களின் பணத்தை நேரடியாகத் தனது சொந்தக் கணக்கிற்கு மாற்றும் திட்டத்திலும் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

8 பேர் அதிரடி கைது

இந்த மெகா காணிக்கைத் திருட்டுப் புகாரில் அவினாஷ் சுக்லாவுக்கு, அவருடன் பணியாற்றிய சக ஊழியர்களும் முழுமையாகத் துணையாக இருந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இதுவரை 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Related Post

Latest News