இலங்கை சிறையில் பயங்கர கலவரம்: 25 பேர் உயிரிழப்பு : 100-க்கும் மேற்பட்டோர் காயம்

இலங்கையின் நீர்கொழும்பு பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே திடீரென மோதல் வெடித்தது. ஆரம்பத்தில் ஏற்பட்ட தகராறு பின்னர் வன்முறையாக மாறியதால், சிறை நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த சம்பவத்தில் இரண்டு காவல் அதிகாரிகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்த தகவல் பரவியதும், கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பலர் சிறைச்சாலை முன்பு திரண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Related Post

Latest News