பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம் : 27 பேர் காயம்

தென் அமெரிக்க நாடான பெருவின் தெற்கு பசிபிக் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகி உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஐகா மாகாணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. பல கட்டிடங்களின் சுவர்களில் பெரிய விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 27 பேர் காயமடைந்துள்ளதாகப் பெரு நாட்டின் அவசரக்கால மீட்புப்படை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இந்த இயற்கைச் சீற்றத்தில் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவம் உள்ளிட்ட அவசரக்கால நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

Related Post

Latest News