ஆட்டம் காணும் தமிழக பாஜக : அடுத்தடுத்து விலகும் பாஜகவின் முக்கிய புள்ளிகள்

தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமாவை பாஜக தேசிய தலைமை தற்போது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

அண்ணாமலை தனது அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விலகியதுடன், புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதையடுத்து, மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து, அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இதையும் படிங்க : ‘சாப்பிட சாப்பாடு கூட இருக்காது’ – ஐஏஎஸ் அகாடமி விழாவில் உருகிய அமைச்சர் அருண் ராஜ்

அவரைத் தொடர்ந்து மாநில செயலாளர் சுமதி வெங்கடேசனும் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

Latest News