இந்தியாவிலேயே முதல் முறை: செயற்கை நுண்ணறிவுத் துறைக்குத் தனி அமைச்சர் நியமனம்

கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வந்த இடதுசாரிகளின் ஆட்சியை வீழ்த்தி ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவுத் துறைக்குத் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் புதிய அமைச்சராக பி.கே. குஞ்ஞாலிக்குட்டி (74) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : 74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் அமைச்சரவையில் நடந்த மிகப்பெரிய மாற்றம்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) துறையின் அமைச்சராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏஐ அமைச்சராகப் பொறுப்பேற்கும் பி.கே. குஞ்ஞாலிக்குட்டிக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT), தொழில் மற்றும் வர்த்தகம், புதிய தொழில்முனைவு (Start-up) என முக்கியத் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related Post

Latest News