74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் அமைச்சரவையில் நடந்த மிகப்பெரிய மாற்றம்

கடந்த 74 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய சாதனையாக, தற்போதைய அமைச்சரவையில் நான்கு பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா பொறுப்பு வகித்து வரும் நிலையில், இன்று வெளியிடப்பட்ட 23 பேர்கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலில் மேலும் மூன்று பெண் எம்.எல்.ஏ-க்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எஸ்.கமலி (அவினாசி தொகுதி), சி.விஜயலட்சுமி (குமாரப்பாளையம்), கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள் 7 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1967 அண்ணா ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக சத்யவாணி முத்து நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. 2011 – 2016 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அதிகபட்சமாக மூன்று பெண் அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தற்போதைய த.வெ.க. ஆட்சியில் முந்தைய சாதனைகளை முறியடித்து, முதன்முறையாக நான்கு பெண்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News