தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், சினிமாவில் இருந்து விலகி அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். இந்த சூழலில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு கடந்த ஏப்ரல் 20-ந் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் – சங்கீதா ஆகியோர் தரப்பில் இருந்து வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜரானதால், வழக்கில் தொடர்புடையவர்கள், நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : தமிழகத்தில் தவெக ஆட்சி : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திடீர் ட்விஸ்ட்
இந்நிலையில், நடிகர் விஜய்–சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நீதிமன்ற நிர்வாக காரணங்களாலேயே இந்த இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


