இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இந்திய ரயில்வே துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். ஹரியானா மாநிலம் ஜின்த் ரயில் நிலையத்திலிருந்து இந்த திட்டத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் இந்த முதல் ஹைட்ரஜன் ரயில், ஹரியானாவின் ஜின்த் மற்றும் சோனிபட் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. இந்த இரு நகரங்களுக்கு இடையேயான தூரத்தை இந்த ரயில் கடக்க சுமார் 2 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரயில் எண் 74010: தினசரி காலை 7:40 மணிக்கு ஜின்த் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, காலை 9:40 மணிக்கு சோனிபட் சென்றடையும்.

ரயில் எண் 74009 (மறுமார்க்கம்): தினசரி காலை 10:40 மணிக்கு சோனிபட்டில் இருந்து புறப்பட்டு, மதியம் 1:00 மணிக்கு ஜின்த் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்தத் திசையில் பயண நேரம் 2 மணி 20 நிமிடங்களாகும்.

இதையும் படிங்க : ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் : இதில் அப்படி என்ன இருக்கு?

இந்த ரயில் தனது பயணத்தின் போது ஜின்த் சிட்டி, பாண்டு பிந்தாரா, லலித் கேரா, பம்பேவா, ஈஷாபூர் கேரி, புடானா, கந்த்ராய், கோஹானா, ராப்ரா, லாத், மோஹானா ஹரியானா மற்றும் பர்வாஸ்னி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில் 10 பெட்டிகளைக் கொண்ட பயணிகள் ரயிலாகும். இதன் மூலம் “உலகிலேயே மிக நீளமான ஹைட்ரஜன் ரயில்” என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

Related Post

Latest News