ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை… அவசரமாக மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிகள்!

ஐரோப்பாவின் பல நாடுகள் இந்த ஆண்டு கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக பிரான்சின் பல பகுதிகளில் வெப்பம் அதிகளவில் உள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தால் உடல்நல பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுருதப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் சில போக்குவரத்து சேவைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நீர்நிலைகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தின் தாக்கமாகவே இந்த அசாதாரண வெப்பநிலை உயர்வு பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களும் வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடும் என்பதால், மக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Post

Latest News