சுற்றி சுற்றி அடிக்கும் டிரம்ப் : இந்திய ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து

இந்தியாவை சேர்ந்த ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணி புரிவதற்கு உதவியாக இருக்கும் ஹெச்1பி விசா நடைமுறையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.

ஏற்கனவே, விசா விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் முறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டிருந்தன. விண்ணப்பதாரர்களின் தொழில் தகுதிகள் மட்டுமின்றி, அவர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் கூட பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பெரிய மாற்றம் வருது! மே 1 முதல் SBI கார்டுகளில் புது விதிகள்..!

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா, ஹெச்-1பி விசா திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு முழுமையாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் விசா எண்ணிக்கையை 65,000 இலிருந்து 25,000 ஆக குறைப்பது, வருடத்திற்கு குறைந்தபட்சம் 2 லட்சம் டாலர் சம்பளம் பெறுவோருக்கே விசா வழங்குவது போன்ற கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், இந்திய ஐடி துறைக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Latest News