தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வெளியாகவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
