ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,502 ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்றும், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சர்வதேச மருத்துவக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.
காங்கோ சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 473 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, எபோலா பாதிப்புக்குள்ளான 628 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், முறையான மருத்துவக் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் மூலம் இதுவரை 229 பேர் இந்த ஆபத்தான நோயில் இருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
காங்கோவின் அண்டை நாடான உகாண்டாவிலும் இந்த வைரஸின் தாக்கம் நீடித்து வருகிறது. ஜூலை 2-ஆம் தேதி வரையிலான கணக்குப்படி, உகாண்டாவில் 20 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
