ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்கும் வசதிக்கான கால அவகாசத்தை மத்திய அரசு 2027 ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எடுத்து இதுவரை எந்த மாற்றமும் செய்யாதவர்கள், தங்களது ஆவணங்களை புதுப்பிக்குமாறு யுஐடிஏஐ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆதார் தகவல்கள் துல்லியமாகவும் புதுப்பித்த நிலையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட தகவல்களை இலவசமாக ஆன்லைன் வழியாக திருத்திக் கொள்ளும் வசதிக்கு மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது.
முன்னதாக இந்த சலுகை வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய இருந்தது. ஆனால் தற்போது அது 2027 ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
