கோவை சிறுமி கொலை வழக்கு : குற்றாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கார்த்திக் உள்ளிட்டோருக்கு எதிராக பாலியல் குற்றங்கள், கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகன் ராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர்மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Post

Latest News