சென்னை புறப்பட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்: சோனியா, ராகுல் காந்தி சந்திப்பு ரத்து!

முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்கு அவருக்குத் தமிழ்நாடு இல்லத்தில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், நேற்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிங்க : திருச்செந்தூர் முருகன் கோயிலில் 100 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து

இந்த பயணத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோரை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் முதலமைச்சர் விஜய் அவசரமாகச் சென்னை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உடனான இன்றைய சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

Latest News