திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மே 28 முதல் மே 31 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்கு ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே 30 ஆம் தேதி புகழ்பெற்ற வைகாசி விசாகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காகவும் சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் கோயில் நிர்வாகம் இந்தச் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.
