பாஜக நிர்வாகியும், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனுமான அலிஷா அப்துல்லா அளித்த புகாரின் பேரில், திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் அலிஷா அப்துல்லா. இவர், ‘யூடியூபர்’ முக்தார், திருச்சி சூர்யா ஆகிய 2 பேர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கண்ணீர்மல்க புகார் மனு அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையின் முகம் அலிஷா போலவும், மற்றொரு குழந்தையின் முகம் பாஜக தலைவர் அண்ணாமலை போலவும் இருப்பதாக புகைப்படங்களை மாற்றி அமைத்து ஆபாசமாக பதிவிட்டுள்ளனர். இந்த செயலால் கடும் மனவேதனை அடைந்த நான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
அலிஷா அப்துல்லா புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே, அவதூறு பரப்பிய வழக்கில் திருச்சி சூர்யாவை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு நபரான முக்தார் மீதும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
