இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேச இளைஞர் அதிரடி கைது

வங்காளதேசத்தில் இருந்து நபர் ஒருவர் எவ்வித சட்டப்பூர்வ ஆவணங்களும் இன்றி அசாம் மாநிலத்திற்குள் நுழைந்திருப்பதாகக் காவல்துறையினருக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், அசாமின் ஹைலஹண்டி மாவட்டத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஷஹித் அகமது (42) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரைப் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க : வருமானத்துக்கு மீறி ரூ.300 கோடி சொத்து : தெலங்கானா டிஎஸ்பி கைது

கைது செய்யப்பட்ட ஷஹித் அகமதிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் வங்காளதேசத்தின் சைஹட் மாவட்டத்தில் உள்ள ரசுல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவின் மேகாலயா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

எல்லையைத் தாண்டி இந்தியாவில் நுழைந்ததற்குப் பின்னால் வேறு ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா அல்லது உளவு வேலைகளில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

Latest News