கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர் 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக செயல்பட்டார்.
இந்நிலையில், அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லிக்குச் சென்ற அவர், கட்சியின் தேசியத் தலைவரை நேரில் சந்தித்து ஐந்து பக்கங்கள் கொண்ட தனது விரிவான ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.
கட்சியில் இருந்து விலகி அண்ணாமலை உடனடியாகப் புதிய அரசியல் கட்சியைத் தொடங்காமல், முதலில் ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து, அதன் பின்னர் அதை அரசியல் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
