கூகுள் நிறுவனம் தனது பிக்சல் (Pixel) சாதனங்களுக்காகப் புதிய ‘ஆண்ட்ராய்டு 17’ (Android 17) இயங்குதளத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சாம்சங், ஒன்பிளஸ், சியோமி உள்ளிட்ட முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது பயனர்களுக்கு இந்த அப்டேட்டை வழங்கத் தயாராகி வருகின்றன.
ஆண்ட்ராய்டு 17: என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன?
ஸ்மார்ட்போன் உலகிற்குப் புதிய பொலிவைத் தரும் நோக்கில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 17 அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது. இதில் மொபைலின் பேட்டரி ஆயுளைத் நீட்டிப்பதற்கான மேம்பட்ட சிஸ்டம் தேர்வுகள், பயனர்களின் தரவுகளைப் பாதுகாக்கும் கூடுதல் பிரைவசி செட்டிங்ஸ் மற்றும் சிஸ்டம் வேகத்தை அதிகரிக்கும் ஆப்டிமைசேஷன்கள் செய்யப்பட்டுள்ளன.
தகுதியான ஸ்மார்ட்போன்களின் முழுப் பட்டியல்!
கூகுள் பிக்சல் (Google Pixel)
பிக்சல் 10 சீரிஸ் (10, 10 Pro, 10 Pro XL, 10 Pro Fold, 10a)
பிக்சல் 9 சீரிஸ் (9, 9 Pro, 9 Pro XL, 9 Pro Fold, 9a)
பிக்சல் 8 சீரிஸ் (8, 8 Pro, 8a)
பிக்சல் 7 சீரிஸ் (7, 7 Pro, 7a)
பிக்சல் 6 சீரிஸ் (6, 6 Pro, 6a)
பிக்சல் ஃபோல்டு (Pixel Fold) மற்றும் பிக்சல் டேப்லெட் (Pixel Tablet)
சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy)
S சீரிஸ்: கேலக்ஸி S26, S25, S24 மற்றும் S23 சீரிஸ் மாடல்கள்.
Z சீரிஸ் (மடிக்கக்கூடியவை): கேலக்ஸி Z டிரைஃபோல்டு, Z ஃபோல்டு ஸ்பெஷல் எடிஷன், Z ஃபோல்டு 7 / ஃபிளிப் 7, Z ஃபோல்டு 6 / ஃபிளிப் 6 மற்றும் Z ஃபோல்டு 5 / ஃபிளிப் 5.
A, M & F சீரிஸ்: கேலக்ஸி A57 முதல் A15 வரை, M56 முதல் M06 வரை, F56 முதல் F06 வரையிலான சீரிஸ் மாடல்கள்.
டேப்லெட்டுகள்: கேலக்ஸி டேப் S11, S10, S9 மற்றும் டேப் ஆக்டிவ் 5 சீரிஸ்.
ஒன்பிளஸ் (OnePlus)
ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open)
ஒன்பிளஸ் 15, 13, 12 மற்றும் 11 சீரிஸ்.
நார்ட் சீரிஸ்: நார்ட் 6, 5, 4 மற்றும் நார்ட் CE 6, CE 6 லைட், CE 5.
பேட் மாடல்கள்: ஒன்பிளஸ் பேட் 4, 3, 2, பேட் லைட் மற்றும் பேட் கோ 2.
நத்திங் (Nothing)
நத்திங் போன் (4a), (4a) புரோ, நத்திங் போன் (3)
நத்திங் போன் (3a), (3a) லைட், (3a) புரோ, நத்திங் போன் (2a), (2a) பிளஸ்
சிஎம்எஃப் போன் 2 புரோ (CMF Phone 2 Pro)
மோட்டோரோலா (Motorola)
ரேஸர் சீரிஸ்: ரேஸர் 70, 60 மற்றும் 50 சீரிஸ்.
எட்ஜ் சீரிஸ்: எட்ஜ் 70, 60, 50 லைன்அப், எட்ஜ் (2025) மற்றும் எட்ஜ் (2026).
மோட்டோ G சீரிஸ்: மோட்டோ G மேக்ஸ், ஸ்டைலஸ் 5G, பவர் 5G, G87, G86, G77, G75, G67, G57, G47, G37 சீரிஸ்.
சியோமி & ரெட்மி (Xiaomi & Redmi)
சியோமி 17, 15, 14, 13T மற்றும் 13T புரோ சீரிஸ்.
சியோமி மிக்ஸ் ஃபிளிப் (Xiaomi Mix Flip)
ரெட்மி மாடல்கள்: ரெட்மி நோட் 15, நோட் 14 சீரிஸ், ரெட்மி 15 சீரிஸ், ரெட்மி A7, A5 சீரிஸ் மற்றும் ரெட்மி டர்போ 5.
போகோ (POCO)
போகோ F8, F7, F6 சீரிஸ்.
போகோ X8, X7 சீரிஸ் மற்றும் போகோ X6 புரோ.
போகோ M8, M7, C85, C81, C71 சீரிஸ் மற்றும் போகோ பேட் மாடல்கள்.
இதர பிராண்டுகள் (Vivo, Oppo, Realme, IQOO, Asus, Honor, Sony)
விவோ (Vivo X300, X200, V70, V60 சீரிஸ்), ஒப்போ (Find X9, X8, Reno 15, 14 சீரிஸ்), ரியல்மி (GT 8 Pro, GT 7, Realme 16, 15 சீரிஸ்), ஐகூ (iQOO 15, 13, Neo 10 சீரிஸ்), ஆசஸ் (ROG Phone 9, Zenfone 12 Ultra), ஹானர் மற்றும் சோனி (Xperia 1 VII, 1 VI) ஆகிய நிறுவனங்களின் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போன்களும் இந்த ஆண்ட்ராய்டு 17 அப்டேட்டைப் பெறத் தகுதியானவை ஆகும்.
