டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என். சந்திரசேகரன், தலைவர் பொறுப்பிலிருந்து விலகப் போவதாகவும், மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பதவி விலகலுக்கான முக்கிய காரணம் என்ன?
என். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா குழுமத்தில் 40 ஆண்டுகால தனது சேவை நிறைவடைவதைக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதவிக் காலம் 2027 பிப்ரவரி 20 அன்று முடிவடைகிறது. அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், 2026 பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற டாடா சன்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில், ஒருமனதான ஆதரவு இல்லாத காரணத்தால் அக்கூட்டத்தில் முடிவு தள்ளிவைக்கப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களாக இதில் எவ்வித தெளிவான முடிவும் எட்டப்படாத நிலையிலும், பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர் இந்தப் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
