மாதவன் நடித்த G.D.N. திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘G.D.N.’ திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 7) திரையரங்குகளில் வெளியானது. கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.

‘G.D.N.’ திரைப்படத்தில் ஆர். மாதவன், ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் தனித்துவமான இடம் பெற்ற ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைப் பயணத்தை திரைப்படம் வழியாக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது.

இப்படத்தில் மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, அதிதி பாலன், டிஜே அருணாசலம், கனிஹா, கருணாகரன் மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம், உலகளவில் ரூ.59 லட்சம் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் சுமார் ரூ.46 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

Latest News