தாய்லாந்தின் தென்பகுதியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் 24 வயதான கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 12 வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை தாய்லாந்தின் தென்பகுதியில் நடைபெற்ற கோலோக் எஃப்ஏ உள்ளூர் கால்பந்து தொடரின் போது நிகழ்ந்தது. அப்போது திடீரென மைதானத்தில் மின்னல் தாக்கியபோது
24 வயதான விங்கர் சோஃப்வான் அவாய் மைதானத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்துக்கு அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து முதலுதவி அளித்தனர். இருப்பினும் கடுமையான காயங்களால் சோஃப்வான் அவாய் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் 12 வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
