தொழிலதிபர் எலான் மஸ்க்கின் தினசரி வருமானம் இத்தனை ஆயிரம் கோடியா?

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மாஸ்க், கடந்த ஓராண்டில் தனது சொத்து மதிப்பில் தினமும் சராசரியாக 875 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,000 கோடி) சேர்த்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

2025 ஜூலை முதல் 2026 ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் எலான் மாஸ்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. தொழிலநுட்பத் துறை மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியே சொத்து உயர்வுக்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஓராண்டில் உலகளவில் வீசிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப அலை, பல தொழில் அதிபர்களின் சொத்து மதிப்பை மல்டி-பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தியுள்ளது. இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள ஈலான் மாஸ்க், முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில்தான் ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.

அவர் இணைந்து உருவாக்கிய இணைய வங்கி, பீட்டர் தீலின் ‘பேபால்’ நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, 2002-இல் ‘ஈபே’ நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. அந்தப் ஒப்பந்தத்தின் மூலமே எலான் மாஸ்க் தனது முதல் பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டினார். அங்கிருந்து தொடங்கிய அவரது வணிகப் பயணம், இன்று டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் (X) எனப் பல பிரம்மாண்ட நிறுவனங்களாக விரிவடைந்துள்ளது.

Related Post

Latest News