12 நாடுகளில் இருந்து வெளியேறுகிறதா நத்திங்? இணை நிறுவனர் விளக்கம்

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான நத்திங், உலகின் பல்வேறு சந்தைகளில் வெளியேற உள்ளதாக வெளியான தகவல்களை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. நிறுவனம் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையல்ல என்று நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் அகிஸ் இவாஞ்சலிடிஸ் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் வெளியான தகவலின்படி, நத்திங் நிறுவனம் மத்திய கிழக்கு, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட உலகளாவிய சந்தைகளில் தனது வணிக நடவடிக்கைகளை குறைக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த சூழலில், நிறுவனம் எந்த சந்தையிலிருந்தும் வெளியேறவில்லை என்றும், விற்பனை தொடர்பாக வெளியிடப்பட்ட எண்ணிக்கைகளும் தவறானவை என்றும் நத்திங் இணை நிறுவனர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய சந்தைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், இந்தியாவில் Nothing நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்கிறது. சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Post

Latest News