சென்னை சென்ட்ரல் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையேயான ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், இன்றும் நாளையும் இரவு மற்றும் அதிகாலை நேர மின்சார ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி யார்டில் பராமரிப்புப் பணி
சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் உள்ள கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய யார்டுப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இதன் காரணமாக, சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாகச் செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் மறுமார்க்கமாக இயங்கும் சில மின்சார ரயில்களின் சேவைகள் பகுதி அளவாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரயில்கள்:
இரவு 9.45 மணி ரயில்: மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், பொன்னேரி – கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரவு 10.35 மணி ரயில்: மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் மின்சார ரயில், மீஞ்சூர் – கும்மிடிப்பூண்டி இடையே பகுதி சேவையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரவு 11.20 மணி ரயில்: மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில், பொன்னேரி – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படாது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்படும் ரயில்கள்:
இரவு 10.30 மணி ரயில்: கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர் மார்க்கெட் வரும் ரயில், கும்மிடிப்பூண்டி – பொன்னேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 3.50 மணி ரயில்: கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர் மார்க்கெட் வரும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி – மீஞ்சூர் இடையே இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 4.50 மணி ரயில்: கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் ரயில், கும்மிடிப்பூண்டி – பொன்னேரி இடையே இயக்கப்படாது.
