முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நேற்று வெளியானது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் படத்தை திருவிழாபோல கொண்டாடி மகிழ்ந்தனர். இதே போல, தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், பர்வேஸ், சம்பத்குமார் உள்ளிட்டோர் நேற்று ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இந்நிலையில், ஜன நாயகன் படத்தைப் பார்ப்பதன் மூலமாக மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் பல தடைகளைக் கடந்து வெளியானபோது அதன் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி கிடைத்ததோ, அதேபோன்ற ஒரு உணர்வும், மகிழ்ச்சியும் தற்போது இந்தப் படத்தைப் பார்த்தபோது கிடைத்ததாகக் கூறினார்.
“முதல்வர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகியுள்ளது. ஜனநாயகன் படத்திற்கும் மாணவர்களின் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜன நாயகன் திரைப்படம் இளைஞர்களை மழுங்கடிக்கவில்லை. ஜன நாயகன் படத்தைப் பார்ப்பதன் மூலமாக மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படுமே தவிர மாணவர்களை மூளைச் சலவை செய்யும் படமல்ல என கூறியுள்ளார்.
