ரூ.10,000 வரை தள்ளுபடியில் MacBook Air M5 : எப்படி வாங்கலாம்?

ஆப்பிளின் புதிய MacBook Air M5 லேப்டாப்பை வாங்க விரும்புபவர்களுக்கு தற்போது அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.10,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1,49,900 விலையில் விற்பனை செய்யப்பட்ட MacBook Air M5-ஐ, ரூ.1,39,900 என்ற விலையில் வாங்கலாம்.

இ-காமர்ஸ் தளமான Flipkart-ல், ICICI Bank, SBI மற்றும் Axis Bank கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Apple MacBook Air M5 அம்சங்கள்

அடிப்படை மாடலிலேயே 16GB RAM மற்றும் 512GB SSD Storage வழங்கப்படுவதால், அலுவலக வேலைகள், கோடிங், போட்டோ எடிட்டிங் போன்ற பணிகளில் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. 13 இன்ச் மாடல் சுமார் 1.23 கிலோ எடையும், 15 இன்ச் மாடல் 1.5 கிலோ எடையும் கொண்டுள்ளது. இதனால் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் இது மிகவும் வசதியான லேப்டாப்பாக இருக்கும்.

அலுவலக வேலை, கல்லூரி படிப்பு, மென்பொருள் உருவாக்கம், நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட பிரீமியம் லேப்டாப் தேடுபவர்களுக்கு MacBook Air M5 மிகவும் சிறந்த தேர்வாகும்.

Related Post

Latest News