டெல்லியில் போராட்டம் தீவிரம் :16 மெட்ரோ நிலையங்கள் திடீர் மூடல்

டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தின் எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்களுக்காக 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த நிலையங்களில் பயணிகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

மூடப்பட்டுள்ள 16 மெட்ரோ நிலையங்கள்

லோக் கல்யாண் மார்க்
ராஜீவ் சௌக்
படேல் சௌக்
ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க்
பாரகம்பா சாலை
உச்ச நீதிமன்றம்
சேவா தீர்த்
ஜன்பத்
மண்டி ஹவுஸ்
சென்ட்ரல் செக்ரடேரியட்
ஐடிஓ
டெல்லி கேட்
இந்திரபிரஸ்தா
கான் மார்க்கெட்
ஜோர் பாக்
சிவாஜி ஸ்டேடியம்

Related Post

Latest News