UPI பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்: நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் பேமென்ட் செய்யலாம்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேலும் எளிமையாக்கும் வகையில், யு.பி.ஐ. (UPI) பயனர்களுக்காக புதிய வசதி விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இன்டர்நெட் அல்லது மொபைல் நெட்வொர்க் இல்லாத சூழலிலும் பணம் செலுத்த முடியும்.

இந்த வசதி, NFC (Near Field Communication) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக, இணைய வசதி குறைவாக இருக்கும் பகுதிகளில் இது பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய NFC அடிப்படையிலான UPI Lite வசதியில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹2,000 வரை செலுத்த அனுமதிக்கப்படலாம். இருப்பினும், இறுதி பரிவர்த்தனை வரம்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே உறுதி செய்யப்படும்.

இந்த வசதி முழுமையாக செயல்பட, NFC ஆதரவு கொண்ட பணம் பெறும் கருவிகள் வணிக நிறுவனங்களில் இருக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் கருவிகளுக்கு தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே இந்த சேவை படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

Latest News