இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோவின் விலை எவ்வளவு இருக்கும்? ஐபோன் 17 ப்ரோவை விட அதிகமா?

ஆப்பிளின் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோவின் விலை முந்தைய iPhone 17 Pro விலையை விட அதிகமாக இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.

ரூ.5,000 வரை விலை உயரலாம்?

லீக்ஸ் தகவல்களின்படி, iPhone 18 Pro வின் இந்திய விலையில் சுமார் ரூ.5,000 வரை அதிகமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிக சேமிப்பு கொண்ட மாடல்களின் விலை இதைவிட மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

iPhone 18 Pro-வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்

2nm தொழில்நுட்பத்தில் உருவாகும் A20 Pro செயலி, வேகமான செயல்திறன், iOS 27 மூலம் விரிவான செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு, கேமரா மற்றும் டிஸ்ப்ளேவில் மாற்றங்கள் மற்றும் 5,500mAh திறன் கொண்ட பேட்டரி இடம்பெறலாம்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஆப்பிளின் சிறப்பு நிகழ்வில் iPhone 18 Pro தொடர் அறிமுகமாகலாம் என்றும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் விற்பனை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News