கச்சா எண்ணெய் விலை 10% உயர்வு: பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்கிறதா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூட முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் பாதுகாப்பு சூழ்நிலையை காரணமாகக் கொண்டு இந்த நீரிணை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. பின்னர் அமைதி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சுமார் 10 சதவீதம் வரை கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலை நீடித்தால், இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்கிறதா?

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.46-க்கும், டீசல் ரூ.101.26-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், எரிபொருள் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Post

Latest News