கத்தாரின் முன்னாள் அமீரும், அந்நாட்டின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த தலைவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, 74 வயதில் காலமானார். அவரது மறைவை கத்தார் அமிரி திவான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் நான்கு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற ஷேக் ஹமத், 2013 வரை கத்தாரின் அமீராக செயல்பட்டார். அவரது தலைமையில்தான் கத்தார் உலகளவில் பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேறிய நாடுகளில் ஒன்றாக மாறியது.
குறிப்பாக, திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மிகப்பெரிய முதலீடுகளை மேற்கொண்டு, கத்தாரை உலகின் முன்னணி LNG ஏற்றுமதி நாடாக மாற்றுவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
ஷேக் ஹமத் மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நான்கு நாட்கள் அரசு துக்கம், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை மற்றும் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
