மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் (MoU) முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் “வீண் வேலை” என்றும் அவர் சாடியுள்ளார்.
“ஈரானுடன் ஒப்பந்தம் இனி செல்லாது”
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இனி செல்லாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் தொடர்ந்து சர்வதேச விதிமுறைகளை மீறி வருவதாகவும், அதனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது ஒப்பந்தங்களை நீட்டிப்பதோ தற்போதைய சூழலில் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவு மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
