வோடபோன் ஐடியா தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்காக புதிய நீண்டகால ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.2,475 விலையில் வழங்கப்படும் இந்த திட்டம், 180 நாட்கள் (6 மாதங்கள்) செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது.
180 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் டேட்டா ஆகிய சலுகைகள் இந்த பிளானில் உள்ளது. ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 ஜிபி அதிவேக (High-Speed) டேட்டா வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு இணைய வேகம் நிறுவனத்தின் பயன்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப குறைக்கப்படலாம்.
அதிக அளவில் வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் வேலை அல்லது கல்வி பயன்பாட்டிற்காக டேட்டாவை பயன்படுத்துபவர்கள் இந்த நிபந்தனையை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரே முறை ரீசார்ஜ் செய்து சேவையை தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு வசதியான தேர்வாக இருக்கும்.
