ரூ.10,000-க்கும் குறைவான விலை : அசத்தலான போனை அறிமுகப்படுத்திய லாவா

இந்தியாவின் முன்னணி உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா, பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. “லாவா ஸ்மார்ட் 4 பிளஸ்” என்ற இந்த புதிய ஸ்மார்ட்போன், ரூ.10,000-க்கு குறைவான விலையில் போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி Internal Storage வசதி உள்ளது. இது தவிர, பயனர்கள் தங்களின் தேவைக்கேற்ப ரேம் திறனை அதிகரித்துக் கொள்ளும் வகையில் கூடுதலாக 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதியும், மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்பி (13MP) பிரைமரி கேமரா மற்றும் ஏஐ (AI) லென்ஸ் அடங்கிய டூயல் கேமரா அமைப்பு எல்இடி ஃபிளாஷ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எச்டிஆர் (HDR), போர்ட்ரெய்ட் மற்றும் நைட் மோட் போன்ற அத்தியாவசிய அம்சங்கள் உள்ளன. முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்காக 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 5000mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் அதை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எஃப்எம் ரேடியோ வசதியும் இதில் உள்ளது.

இந்திய சந்தையில் லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ. 9,999 என்ற பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ‘நீலகிரி புளூ’ (Nilgiri Blue) மற்றும் ‘ஹிமாலயன் சில்வர்’ (Himalayan Silver) ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த மொபைலுக்கு 1 வருட வாரண்டியை வழங்கும் லாவா நிறுவனம், வாடிக்கையாளர்களின் வசதிக்காக வீட்டிற்கே வந்து மொபைலை சர்வீஸ் செய்து தரும் இலவச சலுகையையும் அறிவித்துள்ளது.

Related Post

Latest News