அடேங்கப்பா! 8500mAh பேட்டரியா?., அடுத்த வாரம் அறிமுகமாகும் ரெட்மி 5ஜி

ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ரெட்மி நிறுவனம், தனது புதிய தயாரிப்பான ‘ரெட்மி கே90 அல்ட்ரா’ (Redmi K90 Ultra) மாடலை அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளது. சீனாவில் வரும் ஜூன் 30-ஆம் தேதி அறிமுகமாகிறது. விரைவில், இந்த 5ஜி போன், இந்தியாவிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

கேமிங் பிரியர்களையும், மல்டிடாஸ்கிங் செய்பவர்களையும் கவரும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள 6.8-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்ப்ளே, 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதனால் வெயிலிலும் திரையைத் தெளிவாகப் பார்க்க முடியும்.

மேலும், குவால்காம் நிறுவனத்தின் அதிவேக ‘ஸ்னாப்டிராகன் 8 எலைட்’ சிப்செட் இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹெவி கேமிங் மற்றும் 4K வீடியோ எடிட்டிங் போன்ற வேலைகளை எந்த வித சிரமமும் இல்லாமல் செய்யலாம்.

நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் போன் சூடாகாமல் இருக்க பிரத்யேக ‘இன்பில்ட் கூலிங் ஃபேன்’ தொழில்நுட்பம் இதில் உள்ளது. கிராபிக்ஸ் அதிகம் தேவைப்படும் 3D கேம்களை 60 நிமிடங்கள் வரை சிரமம் இல்லாமல் விளையாட முடியும்.

இதையும் படிங்க : 7700mAh மெகா பேட்டரியுடன் மிரட்டலாக வரும் புதிய ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன்!

கேமரா மற்றும் மெமரி விவரங்கள்

இந்த போனின் பின்புறம் டூயல் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமராவும், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸும் அடங்கும். முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 20 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மெமரியைப் பொறுத்தவரை 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளது.

பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதி

இந்த ஸ்மார்ட்போனில், 8500mAh பேட்டரியைப் பொருத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற கவலை இல்லாமல் தாராளமாக பயன்படுத்த முடியும். இவ்வளவு பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய ஏதுவாக 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் நிறங்கள்

ரெட்மி நிறுவனம் இதனை 3,000 யுவான் (சுமார் ₹41,905) விலைப் பிரிவில் ஒரு சிறந்த கேமிங் ஃபிளாக்ஷிப் மாடலாக அறிமுகப்படுத்துகிறது. இந்த மொபைல் ‘ஸ்பேஸ் சில்வர்’ (Space Silver) நிற வடிவமைப்பை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Related Post

Latest News