7700mAh மெகா பேட்டரியுடன் மிரட்டலாக வரும் புதிய ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன்!

ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமான ஹானர், தனது 600 சீரிஸ் வரிசையில் முற்றிலும் புதிய பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ‘ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி’ என்ற இந்த புதிய போன், பயனர்களை கவரும் வகையிலான பல்வேறு அம்சங்களுடன் வெளியாகவுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.87 இன்ச் HD+ எல்சிடி (LCD) டிஸ்ப்ளே பேனலைக் கொண்டுள்ளது. இது 1592×720 பிக்சல் ரெசொல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது. மேலும், இந்த போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு அட்டகாசமான நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் புதிய ‘ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4’ சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்பட உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய அம்சமாக, ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான மேஜிக் ஓஎஸ் 10 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. மேலும், சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இதில் 7700mAh திறன் கொண்ட மிக பிரம்மாண்டமான பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (45W Fast Charging) வசதியும் உள்ளது. இதனால் ஒருமுறை சார்ஜ் செய்தால் பல நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும். இந்த ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் மிக விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News