நன்றாக தூங்கியும் எப்போதும் சோர்வா? உங்கள் மூளை ‘ஓய்வு கேட்கும்’ 5 ஆபத்தான அறிகுறிகள்!

இரவு முழுவதும் போதுமான அளவு தூங்கினாலும், காலையில் எழுந்தவுடன் மீண்டும் சோர்வாக உணர்கிறீர்களா? அது சாதாரண உடல் சோர்வு அல்ல, உங்கள் மூளை மற்றும் மனம் ஓய்வு கேட்கும் முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மனநலம் மற்றும் நலவாழ்வு துறையில் பணியாற்றும் நிபுணர் பிரகிருதி போத்தார் சமீபத்தில் பகிர்ந்த தகவலின்படி, இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் மக்கள் எப்போதும் மனஅழுத்த நிலையில் வாழ்கின்றனர். வேலை முடிந்த பிறகும், மொபைல் அறிவிப்புகள், சமூக வலைதளங்கள், தொடர்ந்து ஓடும் தகவல்கள் ஆகியவை மூளைக்கு முழுமையான ஓய்வை தராமல் வைத்திருக்கின்றன.

இதையும் படிங்க : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த உணவுகளையெல்லாம் சாப்பிடுங்க

அவர் கூறியபடி, போதுமான தூக்கம் கிடைத்தும் தொடர்ந்து சோர்வாக இருப்பது, வெறும் தூக்கமின்மை பிரச்சனை அல்ல. அது “Mental Recovery Crisis” எனப்படும் மன ஓய்வு குறைபாட்டின் விளைவாக இருக்கலாம்.

முதல் அறிகுறியாக, இரவு நன்றாக தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக எழுவது குறிப்பிடப்படுகிறது. உடல் தூங்கினாலும், மனம் தொடர்ந்து சிந்தித்து கொண்டே இருந்தால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. குறிப்பாக தூங்குவதற்கு முன் மனதில் இருக்கும் கடைசி சிந்தனை, முழு இரவும் மனதை வேலை செய்ய வைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரண்டாவது அறிகுறி, சிறிய விஷயங்களுக்கே அதிக எரிச்சல் அல்லது மன அழுத்தம் ஏற்படுவது. சாதாரண வேலைகளும் மிகவும் சிரமமாக உணரப்படலாம். இது சோம்பேறித்தனம் அல்ல, மனதின் சக்தி குறைந்து வருவதற்கான சிக்னல்.

மூன்றாவது, கவனம் செலுத்த முடியாத நிலை. அடிக்கடி மறதி, ஒரு வேலையில் கவனம் நிலைக்காதது, “Brain Fog” எனப்படும் மூளை மங்கலான உணர்வு போன்றவை மன சோர்வின் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன. தொடர்ந்து பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது, அதிக திரை நேரம் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.

இதையும் படிங்க : இரவு 7 மணிக்குப் பிறகு இந்த 5 உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏன் தெரியுமா?

நான்காவது, மனஅழுத்தம் உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிக்கும். தலைவலி, தசை வலி, உடல் கனத்த உணர்வு, செரிமான கோளாறு, தாடை இறுக்கம், சுவாச சிரமம் போன்றவை மன அழுத்தத்தின் உடல் வெளிப்பாடுகளாக இருக்கலாம்.

ஐந்தாவது மற்றும் மிகவும் கவனிக்க வேண்டிய அறிகுறி, வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைந்து போவது. முன்பு விருப்பமாக செய்த செயல்களில்கூட ஆர்வம் இல்லாமல் போகலாம். குடும்ப உறவுகள், நண்பர்கள், பொழுதுபோக்கு, தனிப்பட்ட விருப்பங்கள் ஆகியவற்றில் மனதளவில் இணைப்பு இல்லாத நிலை உருவாகலாம்.

நிபுணர்கள் கூறுவதாவது, உடலுக்கு ஓய்வு தேவையானது போல, மூளைக்கும் ஓய்வு அவசியம். தியானம், யோகா, ஆழ்ந்த சுவாச பயிற்சி, சில நேரம் மொபைல் மற்றும் திரை சாதனங்களை விட்டு விலகி இருப்பது போன்ற பழக்கங்கள் மனதை மீண்டும் சீர்படுத்த உதவும்.

தொடர்ந்து காரணமே இல்லாமல் சோர்வாக இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related Post

Latest News