போட்டியே இல்லாமல் மாநிலங்களவைக்கு தேர்வானார் பிரவீன் சக்கரவர்த்தி

தமிழகத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 24 இடங்கள் வழக்கமான தேர்தல் மூலமாகவும், 3 இடங்கள் இடைத்தேர்தல் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கடந்த மே மாதம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் 2028 ஜூன் மாதம் வரை இருந்தபோதிலும், முன்கூட்டியே ராஜினாமா செய்ததால் இந்த இடம் காலியாகியது.

இந்த இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி உட்பட மொத்தம் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி எந்த போட்டியும் இன்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Post

Latest News