பிரபல யூடியூபர் முக்தார் அகமது கைது : அலிசா அப்துல்லா புகாரின் பெயரில் நடவடிக்கை

தமிழக பாஜகவின் மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் அலிஷா அப்துல்லா. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘யூடியூபர்’ முக்தார், திருச்சி சூர்யா ஆகிய 2 பேர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கண்ணீர்மல்க புகார் மனு அளித்திருந்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்த புகாரில், யூடியூபர்கள் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அந்த வீடியோவில் தனது குழந்தைகள் குறித்து தவறான கருத்துகள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தியதாகவும், இது தன்மானத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாகவும் அலிஷா அப்துல்லா வேதனை தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே திருச்சி சூர்யா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Post

Latest News