இனி இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம்? மெட்டா நிறுவனத்தின் புது பிளான்

இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய “Instagram Plus” என்ற கட்டண சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் இனி இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்துள்ளது.

இந்தியாவில் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், “Instagram Plus” என்ற புதிய சந்தா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதல் வசதிகளை விரும்பும் பயனர்களுக்காக இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம்மின் இலவச பதிப்பு தொடர்ந்து வழக்கம்போல செயல்படும் என்றும், புதிய சந்தா சேவை முற்றிலும் விருப்பத்தேர்வாக மட்டுமே இருக்கும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

Instagram Plus-ல் என்னென்ன வசதிகள்?

Instagram Plus சந்தாதாரர்களுக்கு பல்வேறு பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படுகின்றன. சாதாரண பயனர்களுக்கு கிடைக்காத பிரத்யேக கருவிகள், கணக்கின் செயல்திறன் குறித்த விரிவான Insights,
பதிவுகள் எத்தனை பேரை சென்றடைந்தன என்பது பற்றிய துல்லியமான புள்ளிவிவரங்களை இதில் பார்த்துக்கொள்ளலாம்.

யாருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்?

குறிப்பாக Content Creators, Influencers மற்றும் தொழில்முறை பயன்பாட்டிற்காக Instagram-ஐ பயன்படுத்துபவர்களுக்கு இந்த சந்தா சேவை அதிக பயனளிக்கும் என கூறப்படுகிறது. கூடுதல் வசதிகளை விரும்புபவர்கள் மட்டுமே மாதம் ரூ.299 செலுத்தி “Instagram Plus” சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Related Post

Latest News