கூகுள் மேப்பை நம்பி தண்டவாளத்தில் காரை ஓட்டி சிக்கிக்கொண்ட மூதாட்டி

கூகுள் மேப்பை நம்பி, 70 வயது மூதாட்டி ஒருவர் தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டிச் சென்ற வினோத சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது காரில் புதிய பகுதி ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்தார். வழி தெரியாததால் தனது காரில் இருந்த ஜி.பி.எஸ் வழிகாட்டியைக் ஆன் செய்து, அது காட்டிய திசையில் பயணித்துள்ளார்.

அந்த ஜி.பி.எஸ் கருவி தவறான வழியைக் காட்டியதாகத் தெரிகிறது. ஆனால், அதை கவனிக்காத அந்த மூதாட்டி ஜி.பி.எஸ் சொன்ன இடது பக்கத்தில் காரைத் திருப்பியுள்ளார். அடுத்த சில நொடிகளில் கார் ஒரு மேம்பாலத்தின் மேல் இருந்த ரயில் தண்டவாளத்திற்குள் புகுந்தது.

தண்டவாளத்தின் மீது கார் ஏறிய பிறகும், அதை கவனிக்காமல் காரை ஓட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் தண்டவாளத்தின் இரும்புப் பாதைகளுக்கு நடுவே காரின் சக்கரங்கள் சிக்கி நகர முடியாமல் நின்றது.

காரை எடுக்க முடியாமல் மூதாட்டி தவித்ததைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாகப் காவல்துறைக்கும், ரயில்வே துறைக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் அந்தத் தடத்தில் வரவிருந்த ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மூதாட்டியைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் கிரேன் உதவியுடன் தண்டவாளத்தில் சிக்கியிருந்த கார் அப்புறப்படுத்தப்பட்டது.

Related Post

Latest News