சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம் : பெரம்பூர் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தனியாக கிடந்த சூட்கேஸில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையின் பரபரப்பான பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் சூட்கேஸ் ஒன்று தனியாக கிடந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் இருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. உடலின் அடையாளத்தை கண்டறியும் முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Post

Latest News