AI மாணவர்களை வேகமாக முட்டாளாக்கும் – ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் தொழில்நுட்பத்தை மிக விரைவாக அறிமுகப்படுத்துவது குறித்து ஜோஹோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த நவீன தொழில்நுட்பமானது மாணவர்கள் பல்வேறு விஷயங்களை மிக வேகமாகப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதே நேரத்தில் இது மாணவர்களின் சொந்தமாக சிந்திக்கும் திறனைக் குறைத்து, அவர்களை மிக வேகமாக முட்டாளாக்கும் பேராபத்தும் உள்ளது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவின் முதல் 100% எத்தனால் கார்: புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் அறிமுகம்

மாணவர்கள் முதலில் தங்களின் அடிப்படை அறிவு, சிந்திக்கும் திறன், விடாமுயற்சி மற்றும் தொடர் பயிற்சி ஆகியவற்ற வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இவருடைய இந்த எச்சரிக்கை தற்போது கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Related Post

Latest News