இந்தியாவின் முதல் 100% எத்தனால் கார்: புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் அறிமுகம்

இந்தியாவில் மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கும் வகையிலும் மாருதி சுசுகி நிறுவனம் நூறு சதவீத எத்தனால் எரிபொருளில் இயங்கக்கூடிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இணைந்து இந்த அதிநவீன காரை அறிமுகப்படுத்தினர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் தேவையைக் குறைப்பதற்காக, அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய எத்தனால் எரிபொருள் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார், தற்போது பயன்பாட்டில் உள்ள சாதாரண வேகன் ஆர் காரைப் போன்றே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த காரின் பின்புறத்தில் ‘ஃபிளெக்ஸ்-ஃப்யூல்’ என்ற சிறிய லோகோ பிரத்யேகமாக ஒட்டப்பட்டுள்ளது.

உள்புறத்தில் எந்த மாற்றமும் இன்றி, விசாலமான இடவசதியுடன் கூடிய இரட்டை வண்ண உட்புற வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய பொருட்கள் வைக்கும் இடம் (Boot Space) போன்ற நவீன வசதிகள் அனைத்தும் வழக்கம் போல் இடம்பெற்றுள்ளன.

Related Post

Latest News